Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 9, 2023

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.சுவாச பிரச்சனை, மாரடைப்பு நச்சுக்கள் வெளியேறுவது, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும், சிறுநீரக பிரச்சினை ஏற்படாது.

பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளும், மாசுக்களும் இருக்கும். இவை நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கு தெரியாமலே நம் நுரையீரலுக்குச் சென்று சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.

மேலும் கத்திரிக்காய் இயற்கையாகவே நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நம் நுரையீரலில் இருக்கக்கூடிய கெட்ட கிருமிகள், தூசிகள் போன்றவைகளை சளி மூலமாக வெளியேறிவிடும். இதனால் நுரையீரல் சுத்தமாக இருக்கும் சுவாச பிரச்சனை வராது.

மேலும் கத்திரிக்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வர உடலில் ஏற்படக்கூடிய கெட்ட கொழுப்புகள் கரையும். இதய தசைகள் நன்கு வலுப்பெறும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் இதன் மூலமாக மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.

அதனையடுத்து ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்க கத்தரிக்காய் முக்கிய பங்காற்றுகிறது. அதாவது பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதிக அளவு கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதிப்பட்டு வருபவர்கள் தினமும் கத்தரிக்காயை உணவில் சேர்த்துக் கொண்டால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். மேலும் சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் கத்தரிக்காய் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர சிறுநீரக கற்கள் வெளியேறும். மேலும் சிறுநீரக சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகிறது.

No comments:

Post a Comment

Popular Feed