தமிழ் ஆசிரியர்களுக்கு திறன்வளர் பயிற்சி

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அடுத்த கல்வி ஆண்டில்(2024-25) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மேம்படுத்தப்பட்ட கற்றல் அனுபவங்களை வழங்கும் வகையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தொடக்க நிலை வகுப்புகளான 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம், திருவண்ணாமலை மாவட்டம் மத்தங்குளத்தில் நவ.6 முதல் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் பயிற்சி வழங்கப்படும். அதற்கான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel