Monday, February 19, 2024

இவர்களுக்கான உயர்கல்வி செலவுகளை அரசே ஏற்கும் - பட்ஜெட்டில் அறிவிப்பு.!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

சுமார் 1.30 மணி நேரம் பட்ஜெட் உரையை அவர் வாசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, அறிவுசார் பொருளாதாரம் உட்பட 7 மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பின் கீழ் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்தவகையில் உயர்கல்வி பெற விரும்பும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment