12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

தமிழக பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதற்கு முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான செயல்முறை தேர்வு பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 17 வரை நடைபெற்று முடிந்தது.

அதன் பின்னர் 11 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கான ஆண்டு இறுதித் தேர்தல் நடைபெற்ற வருகின்றன.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருப்பதால் பொது தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணைப்படி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் 6 5 2024 அன்று வெளியாகும். அன்று tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.

அதன் பிறகு மாணவர்கள் அந்த மதிப்பெண்ணின் அடிப்படையில் தங்கள் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும் பணியைத் தொடங்கலாம்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel