தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 'இளநிலை செய்தியாளர்' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இதற்கான தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
வேலை வகை: அரசு வேலை
நிறுவனம்: தமிழக காவல்துறை
பணியிடம்: Junior Reporter
காலியிடங்கள்: 54
கல்வித் தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அதனோடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 'இளநிலை செய்தியாளர்' பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு அதிகப்பட்ச வயது 37 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
மாத ஊதியம்: இப்பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.36,200 முதல் ரூ.1,14,800 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.4.2024
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி
இளநிலை செய்தியாளர் பணிக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் www.eservices.tnpolice.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment