மகளிர் உரிமைத்தொகை ரூ.1000.. தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்..!!!

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் இதில் விடுபட்டவர்களின் விவரம் சேகரிக்கப்பட்ட நிலையில் 1.48 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும் ஜூலை 15ஆம் தேதி முதல் அவர்களது வங்கி கணக்கிலும் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel