Subscribe Us

Tuesday, July 2, 2024

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் செமஸ்டர் தேர்வுகள்!

தமிழகம் முழுவதும் இனி வரும் கல்வி ஆண்டுகளில் அனைத்து கலை அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படும்.
அதே போல் ஒரே நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படும் என கல்லூரி கல்வி இயக்குனர் கார்மேகம் அறிவித்துள்ளார். அதன்படி நாளை முதலாம் ஆண்டு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செமஸ்டர் தேர்வுகளை ஒரே நேரத்தில் நடத்தி முடிக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த உத்தேச அட்டவணையை வெளியிட்டுள்ள அரசு கலை மற்றும் கல்லூரி இயக்ககம், செமஸ்டர் தேர்வுகளை நவம்பர் மாதம் 4 முதல் நவம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் எனவும் தேர்வு முடிவுகள் டிசம்பர் 21ம் தேதிக்குள் வெளியிடப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed