Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, July 30, 2024

CPS ஒழிப்பு இயக்கம் - செய்தி அறிக்கை


ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் தமிழக அரசை கண்டிக்கிறோம் . புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை DPI வளாகத்தில் அறவழியில் போராட்டம் நடத்த முயற்சித்த டிட்டோஜாக் ஆசிரியர்களை கைது செய்த தமிழக காவல்துறையையும் , தமிழ்நாடு ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.

தேர்தல் வாக்குறுதியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த திமுக அரசு . கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அறவழியில் போராடுபவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது ஜனநாயக படுகொலை ஆகும்.

கைது செய்தவர்களை உடனடியாக விடுவித்து , கோரிக்கைகளை நிறைவேற்றித் தர CPS ஒழிப்பு இயக்கம் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது .

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News