Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, September 18, 2024

சர்க்கரை நோயால் அவதிப்படுவோர் இந்த ஊற வைத்த விதையை சாப்பிடலாம்




பொதுவாக சப்ஜா விதைகளை இரவில் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் சாப்பிட்டால் உடல் உஷ்ணம் குறையும், இதன் ஆரோக்கியம் குறித்து நாம் இப்பதிவில் காணலாம் 

1.சப்ஜா விதைகள் மூலம் உஷ்ணத்தால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.

2.இதை பாலில் நாட்டு சர்க்கரையுடன் கலந்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். அப்படி சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் மட்டுமல்ல ,மூல நோய் குணமாகும் ,

3.மேலும் சர்க்கரை நோயால் அவதிப்படுவோர் இந்த ஊற வைத்த சப்ஜா விதையினை சாப்பிட சுகர் அளவு குறையும் ,

4.மேலும் இது பசியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதால் எடை குறைப்புக்கு வழி செய்யும் .மேலும் இந்த சப்ஜா விதையின் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்

5.சப்ஜா விதை பெண்களின் மாதவிடாய், வெள்ளைப்படுதல் நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. 

6.மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஊற வைத்த சப்ஜா விதையை ஒரு தேக்கரண்டி பாலிலோ அல்லது தேனிலே கலந்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்.

7.இதை ஊரவச்சி சாப்பிடுவதால் அசிடிட்டி ,நெஞ்செரிச்சல் குணமாகும்

1 comment: