ஆதார் புதுப்பிப்பு முகாம்கள் பள்ளிகளில் நடத்த உத்தரவு

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், 'பயோ மெட்ரிக்' அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்களுக்கு யு.ஐ.டி.ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி புவனேஷ் குமார் எழுதியுள்ள கடிதம்:

'பயோமெட்ரிக்' எனப்படும், கண் கருவிழிப்படலம் மற்றும் கைவிரல் ரேகை புதுப்பிப்பு பணியை பள்ளிகளில் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

அதில், 5 - 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்க வேண்டியது அவசியம். 17 கோடி ஆதார் எண்களுக்கான புதுப்பிக்கும் பணிகள் நிலுவையில் இருக்கின்றன.

பள்ளி குழந்தைகளுக்கான பயோமெட்ரிக் தகவல் களை புதுப்பிக்காவிட்டால், பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பலன்கள் அவர்களுக்கு கிடைக்காமல் போய்விடும்.

குறிப்பாக நீட், ஜே.இ.இ., சி.யு.இ.டி., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு பெயர்களை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, நிலுவையில் உள்ள பயோமெட்ரிக் புதுப்பிக்கும் பணிகளை முடிக்க, பள்ளிகளில் முகாம்கள் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel