ஓய்வூதிய வழக்கில் மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவு....


ஓய்வூதிய வழக்கில் மனுதாரரின் கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு....

*திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரெடெரிக் எங்கெல்ஸ் என்பவர் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நீதியரசர்கள் G.R. சுவாமிநாதன், R. கலைமதி அமர்வில் இன்று (15.12.2025)விசாரணைக்கு வந்தது.

*இவ்வழக்கில் அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் ஆஜராகி இவ்வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டி உள்ளதால் அவகாசம் தேவை என்று கேட்டார். இதனை அடுத்து நீதியரசர்கள் மனுதாரரின் புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்த எழுத்துப் பூர்வமான கேள்விகளுக்கு வரும் புதன்கிழமை எழுத்துப் பூர்வமாக பதிலளிக்க உத்தரவிட்டு நீதியரசர்கள் 17.12.2025 அன்றைக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel