ரிசர்வ் வங்கி வேலை வாய்ப்பு; 572 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

மத்திய வங்கியான ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 572 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை அலுவலகத்தில் மட்டும் 9 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு அலுவலகத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எந்த மாநில அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், வட்டார மொழியில் தகுதித் தேர்வு நடத்தப்படும்.

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை: 572

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 01.01.2026 அன்று 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: ரூ. 46,029

தேர்வு முறை:

இதில் கணினி மற்றும் வட்டார மொழி தகுதித் தேர்வு மூன்று படிநிலைகள் உண்டு. இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

கணினி வழித் தேர்வு:

கணினி வழித் தேர்வு 120 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (30), திறனறிதல் (30), கணிதம் (30), மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் (General Awareness) (30) என மொத்தம் 120 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 1 மணி நேரம் 30 நிமிடங்கள். இந்த தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலே வேலை கிடைக்கும்.

கணினி வழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின் வட்டார மொழி தகுதித் தேர்வு நடைபெறும். பின்னர் இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.rbi.org.in அல்லது https://ibpsreg.ibps.in/rbipodec25/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 04.02.2026

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.450 ஆகவும், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ.50 ஆகவும் உள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel