விரைவில் முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு?

ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,960 முதுகலை ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு, முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நடவடிக்கையால், முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு (Counselling) விரைவில் நடைபெறும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக பணிநியமனத்தை எதிர்நோக்கி இருப்பதால், இந்த அறிவுறுத்தல் அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் உள்ளது.

கலந்தாய்வு தேதி மற்றும் நடைமுறை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel