TET INSTRUCTIONS : ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளர் திரு.ராமேஸ்வர முருகன் அவர்கள் தெரிவித்த தகவல்கள்

1.ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தற்பொழுது பணியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் விண்ணப்பிக்கும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

2. இதன் மூலம் பத்தாம் வகுப்பு முடித்து இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் 12 ஆம் வகுப்பில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

3. பனிரெண்டாம் வகுப்பு படிக்காதவர்கள் விண்ணப்பிக்க இயலாது என்ற நிலையும்

4. பன்னிரண்டாம் வகுப்பிலேயே ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும்(SGTT) விண்ணப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

5. பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு மற்றும் பிஎட் ஆகியவற்றில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களிருக்க வேண்டும் என்பது (ஏற்கனவே 40% என அறிவிக்கப்பட்டு இருந்தது) நீக்கப்பட்டுள்ளன.

6. இடைநிலை ஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட B.ed முடித்த ஆசிரியர்கள் தற்பொழுது அவர்கள் வகிக்கும் பதவிக்கு உண்டான தேர்வு எழுதினால் போதும். உதாரணத்திற்கு அவர் தற்பொழுது இடைநிலை ஆசிரியர் பதவியில் வேலை செய்து கொண்டிருந்தால் தாள் ஒன்றும், பட்டதாரி ஆசிரியராக வேலை செய்து கொண்டிருந்தால் தாள் இரண்டும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று இருந்தால் அவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பதவி உயர்வு பெற தாள் இரண்டும் எழுத வேண்டும்

7. பொதுவாக தற்போது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் பணியில் தொடர தாள் ஒன்றும் பட்டதாரி ஆசிரியராக பதிவு உயர்வு பெற தாள் இரண்டும் தேர்வு எழுத வேண்டும்.

8. மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கும் இன சுழற்சி அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பெண்களை அவர்களுக்கு தகுதி மதிப்பெண்களாக கொள்ளப்படுகிறது.

9.OC எனப்படும் இதர வகுப்பினருக்கு NCTE விதிகளின்படி 90 மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு அந்த மதிப்பெண்களை குறைக்க வாய்ப்பு இல்லை.

10. பிற இனத்தவர்களுக்கு(OBC,ST.ST) பேச்சு மதிப்பெண்ணை மாநில அரசுகள் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற NCTE விதிகளின்படியே மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்கள்.

11. பொதுவாகEMIS id உள்ளவர்கள் அனைவரும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

12. சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும்EMIS I'd வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

13. SMC மூலம் தற்பொழுது பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களில் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கும் தற்காலிக EMIS id வழங்கப்பட்டுள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்கலாம்.

14. தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் கையொப்பம் . வட்டார கல்வி அலுவலர் கையொப்பம் மற்றும் மாவட்ட கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலர் கையொப்பம் மூன்றும் இடம் பெற வேண்டும்.

15. உயர்நிலை / மேல்நிலை மற்றும் சுயநிதி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பணிச் சான்றிதழில் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தனியார் பள்ளிகள்) கையொப்பம் இடம் பெற வேண்டும் 

16. பொதுவாக பணியில் தொடர அந்தந்த பதவிக்கு உரிய தேர்வும் பதவி உயர்வில் செல்ல வேண்டுமாயின் அதற்கு உண்டான தேர்வு எழுத வேண்டும்

17. பட்டதாரி ஆசிரியர்கள்/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகியோர் தாள் இரண்டு மட்டும் எழுதினால் போதுமானது.

18. இடைநிலை ஆசிரியர்கள் பணியில் தொடர மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் ஒன்று மட்டும் எழுதினால் போதுமானது.

19. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணியில் தொடர தாள் ஒன்று எழுதினால் போதுமானது.

20. இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற தாள் இரண்டு எழுத வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் நேற்று பெறப்பட்டன விண்ணப்பிக்க கால அவகாசம் போதுமான அளவு அளிக்கப்பட்டுள்ளதால் போதிய தகவல்கள் திரட்டிக் கொண்டு அதன் அடிப்படையில் தவறில்லாமல் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel