TET தேர்வுக்கு பணிச்சான்று வழங்கும் விண்ணப்பிக்க நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் - டிட்டோஜாக் அறிக்கை


பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் டிட்டோஜாக் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் தகுதி தேர்வுக்கு. விண்ணப்பிக்கும் போது பணி சான்று வழங்க வேண்டி உள்ளது.

இந்த பணிச்சான்றை பெறுவதற்கு கல்வி சான்றுகளின் உண்மைத் தன்மை சான்றுகள் மற்றும் பணிப் பதிவேடு நகல் உள்ளிட்ட ஏராளமான ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்டத் தொடக்கக் அலுவலரிடம் பெற வேண்டி உள்ளது. சில மாவட்டங்களில் தணிக்கைத் தடை சான்றுகளையும் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கேட்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் வட்டார கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம்-பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் எல்லாம் ஏற்கனவே வழங்கப்பட்டு பணிபுரிந்து வரும் நிலையில் மீண்டும் அவைகளை எல்லாம் மீண்டும் நகலெடுத்து வழங்க வேண்டியதில்லை என டிட்டோஜாக் கருதுகிறது.

டிட்டோஜாக் அறிக்கை - Download here

Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel