1 லட்சம் பள்ளிகளில் 1.2 கோடி மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிப்பு; நீட், ஜே.இ.இ தேர்வுகளுக்கு அப்டேட் கட்டாயம்

நாடு முழுவதும் உள்ள ஒரு லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் பயிலும் 1.2 கோடி மாணவர்களுக்கு, அவர்களது பள்ளி வளாகங்களிலேயே ஆதார் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்கும் பணியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.


மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தச் செய்திக் குறிப்பில், நீட், ஜே.இ.இ போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு ஏதுவாக, 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வரும் அக்டோபர் வரை இந்தச் சேவை இலவசமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் அதிகமான பள்ளிகளில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கோடிக்கணக்கான பள்ளி மாணவர்களுக்கு அவர்களுடைய பள்ளி வளாகங்களிலேயே ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை மேற்கொண்டு உதவி செய்துள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “இதுவரை இந்த பெரும் நடவடிக்கை 1.2 கோடி பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருந்துள்ளது. 2025 செப்டம்பரில் பள்ளி மாணவர்களுக்காக இந்த கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வி துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் உள்ளிட்டவற்றுடன் ஒருங்கிணைந்து இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் பிராந்திய அலுவலகங்களும், மாநில அலுவலகங்களும் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

இப்பணிகளுக்காக 4 ஆயிரம் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பணியை விரைவுபடுத்த மேலும் அதிக எண்ணிக்கையிலான எந்திரங்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஈடுபட்டுள்ளது. மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மூலம் அவர்கள் பல்வேறு அரசுத் திட்டங்கள், கல்வி உதவித் தொகைகள் ஆகிய பயன்களைப் பெற முடியும். போட்டித் தேர்வு மற்றும் பல்கலைக்கழக தேர்வுகளிலும் அவர்கள் பதிவு செய்ய இயலும். எனவே, மாணவர்களின் ஆதாரில் புதுப்பித்தலை மேற்கொள்ள பெற்றோர்களையும், காப்பாளர்களையும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதுப்பித்து வருகிறது. 2025 அக்டோபர் முதல் ஓராண்டு காலத்திற்கு 7 முதல் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு இலவசமாக ஆதாரில் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தலை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஒரு முக்கிய மைல்கல்லாக, இந்தியா முழுவதும் 1 லட்சத்து 3,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சிறப்பு முகாம்களை நடத்தி, லட்சக்கணக்கான மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே எளிதாகக் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை (MBU) நிறைவு செய்ய உதவியுள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட இந்த பிரம்மாண்டமான நடவடிக்கையின் மூலம், சுமார் 1.2 கோடி (12 மில்லியன்) பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளிகளிலேயே பயோமெட்ரிக் புதுப்பிப்பை முடித்துள்ளனர்.

கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (UDISE+) செயலியுடன் வெற்றிகரமான தொழில்நுட்ப ஒருங்கிணைப்புக்குப் பிறகு, செப்டம்பர் 2025-இல் பள்ளி மாணவர்களுக்கான இந்த சிறப்புத் திட்டத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தொடங்கியது.

மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் UDISE+ அமைப்புடன் இணைக்கப்பட்டதன் மூலம், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பயோமெட்ரிக் புதுப்பிப்பு நிலையை அறிந்துகொள்ள முடிந்தது. இதன் மூலம், பயோமெட்ரிக் புதுப்பிக்க வேண்டிய மாணவர்களைக் கண்டறிந்து, பள்ளிகளிலேயே முகாம்களை நடத்தி பணிகளை முடிக்க இது உதவியது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் மண்டல மற்றும் மாநில அலுவலகங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கல்வித் துறைகள், மாவட்ட நிர்வாகம், பள்ளிகள் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூட்டாளர் அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த மாணவர் நலன் சார்ந்த பணியைச் செயல்படுத்தி வருகின்றன.

தற்போது நடைபெற்று வரும் இந்தப் பணிக்காக குறைந்தபட்சம் 4,000 இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. பணிகளை மேலும் வேகப்படுத்த இந்த இயந்திரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI)திட்டமிட்டுள்ளது.

மாணவர்களின் ஆதாரில் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்து வைத்திருப்பது, பல்வேறு அரசுத் திட்டங்களின் பலன்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகளைப் பெறுவதற்கும், நீட், ஜே.இ.இ, சி.யு.இ.டி (NEET, JEE, CUET) போன்ற போட்டித் தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளுக்குப் பதிவு செய்யும்போதும் அங்கீகாரத்தைச் சுலபமாக்க உதவுகிறது. எனவே, பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் தங்கள் குழந்தைகளின் பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்குமாறு UIDAI ஊக்குவித்து வருகிறது.

இந்த சிறப்புப் பணி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 7 முதல் 15 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஆதார் பயோமெட்ரிக் புதுப்பிப்பை, அக்டோபர் 1, 2025 முதல் ஓராண்டு காலத்திற்கு இலவசமாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது.

பள்ளிகளில் நடத்தப்படும் முகாம்கள் தவிர, மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள எந்தவொரு ஆதார் பதிவு மையங்கள் மற்றும் ஆதார் சேவா கேந்திராக்களுக்குச் சென்றும் தங்களது பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்.” என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories

Thamizhkadal WhatsApp Channel