🪭🪭துறைத் தேர்வு - மே-2026 க்கான அறிவிக்கை வெளியீடு. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான துறைத்தேர்வு 2026 மே மாதத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
🪭🪭100% மதிப்பெண் பெறும் தேர்வர்களின் விடைத்தாட்களை முகாம் அலுவலர் ஆய்வு செய்து கையொப்பமிட அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு
🪭🪭EMIS - Students TC Generation Regarding -
2025-26 கல்வியாண்டு இறுதி வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு TC சார்ந்த அனைத்து தகவல்களையும் பதிவு செய்து Save மட்டுமே செய்து கொள்ளலாம். மாநில/ மாவட்ட திட்ட அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கும் வரை எக்காரணம் கொண்டும் common pool ற்கு அனுப்புதல் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
🪭🪭புகார் மீது புகார் - வட்டாரக் கல்வி அலுவலருக்கு (BEO) கட்டாய ஓய்வு அளித்து இயக்குநர் உத்தரவு.
🪭🪭3வது மொழிப்பாடத்தை உடனடியாக பயிற்றுவிக்க தொடங்குமாறு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு!
மும்மொழிக் கொள்கையை அடுத்த ஒரு வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ உத்தரவு!
NCERT-ன் மொழிப்பாட புத்தகங்களுக்கு காத்திருக்காமல், 6ம் வகுப்புகளில் 3வது மொழிப்பாடத்தை உடனடியாக பயிற்றுவிக்க தொடங்குமாறு உத்தரவு பிறப்பிப்பு.
படிப்படியாக 2030-31க்குள் 10ம் வகுப்பு வரை இக்கொள்கையை கட்டாயமாக்க திட்டம்
🪭🪭செல்ஃபி மோகம் - அருவியில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு
ஆந்திரா முலகும்மி அருவிக்கு குளிக்க சென்ற 4 பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுக்க முயன்றபோது அருவியில் மூழ்கி 3 மாணவிகள் உயிரிழப்பு.
மாணவி ஒருவர் சிறு காயங்களுடன் மீட்பு
🪭🪭TNTET டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் ஏதேனும் தேவை இருப்பின் செய்து கொள்ளலாம்.
👉EDIT ஆப்ஷன் இப்போது கொடுக்கப்பட்டுள்ளது.
11.04.2026 முதல் 13.04.2026 திருத்தம் செய்யலாம்.
🪭🪭வேலைக்கு செல்லும்போது இளைஞருக்கு நேர்ந்த துயர சம்பவம்
👉தந்தையின் வேலை கிடைத்தும் நிலைக்காத நிம்மதி
👉ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிப்பட்டு உயிரிழந்ததால் வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்கமுயன்ற மகனும் ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலி.
👉சென்னை திலகர் நகரை சேர்ந்த வேணுகோபால் கடந்த 2023ல் உயிரிழந்த நிலையில், கடந்த ஆண்டு நவ.11ம் தேதி அவரது மகன் கிஷோர் குமாருக்கு வேலை கிடைத்தது.
👉திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் நேற்று வேலைக்கு செல்லும்போது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடந்தபோது இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. 🪭🪭நமக்கு இருக்கிறது ஒரே Choice மட்டும்தான். அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்கிற ஒரே Choice" -கார்த்தி சிதம்பரம் எம்.பி.
🪭🪭பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் ராஜ்யசபா எம்பியாக (மாநிலங்களவை உறுப்பினர்) முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.
மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அறையில் நடைபெற்ற எளிய விழாவில் நிதிஷ் குமாருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக நிதிஷ் குமார் ஏப்ரல் 9ஆம் தேதியே டெல்லி சென்றடைந்தார்.
முன்னதாக மார்ச் 16, 2026 அன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் இவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் மார்ச் 30 அன்று தனது பீகார் சட்ட மேலவை (MLC) உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த பதவியேற்பின் மூலம் இந்தியாவின் நான்கு முக்கிய அவைகளிலும் (பீகார் சட்டப்பேரவை, சட்ட மேலவை, மக்களவை மற்றும் மாநிலங்களவை) மக்கள் பிரதிநிதியாகப் பணியாற்றிய மிக அரிதான மைல்கல்லை நிதிஷ் குமார் எட்டியுள்ளார்.
நிதிஷ் குமார் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றுள்ளதால், பீகாரில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) தீவிரமாக ஈடுபட்டுள்ளது. வரும் ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
🪭🪭பணி தொடங்கியது
தமிழகத்தில் இறுதி வேட்பாளர்கள்= பட்டியல் வெளியானது. இதனை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டப்பட வேண்டிய பேலட் பேப்பர் அச்சிடும் பணி தொடங்கியது.
வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் அச்சிடப்படும், பேலட் பேப்பரின் மாதிரிகளை தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேரில் ஆய்வு
🪭🪭ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு ஈரான் கட்டணம் வசூலிப்பதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம்
"ஈரானின் நடவடிக்கை கவுரமற்றது மற்றும்
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய செயல்"
🪭🪭சோதனை வெற்றி
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான 'ஏர் டிராப்' சோதனை வெற்றி:
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
🪭🪭ஹார்மோஸ் நீரிணையை நாள் ஒன்றுக்கு 15 கப்பல்கள் மட்டுமே கடக்கலாம் என்று ஈரான் நிபந்தனை
போர் நிறுத்த நிபந்தனைகளின் படி கப்பல்களுக்கு அனுமதி வழங்குவதில் கட்டுப்பாடு என்றும் அறிவிப்பு
🪭🪭சபரிமலை கோயில் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து
👉எனது வழக்கம், எனது மதம், எனது மதத்தினர், எனது பிரிவினர் மட்டுமே, எனது கோயிலுக்கு வர வேண்டும். வேறு யாரும் வரக்கூடாது என்று கூறுவது இந்து மதத்திற்கு நல்லதல்ல”
சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய அரசு வாதிடும் நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி நாகரத்னா கருத்து.
🪭🪭சமையல் எரிவாயு (LPG) சிலிண்டர் போதுமான அளவு உள்ளது. எனவே மக்கள் பதற்றம் அடைய வேண்டாம்
இந்தியன் ஆயில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் அசோகன் பேட்டி
🪭🪭ராமதாஸ் பாமகவுக்கு 'சிலிண்டர் சின்னம்'
சட்டப்பேரவைத் தேர்தலில் ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு 'சிலிண்டர்' சின்னம் ஒதுக்கீடு
சசிகலாவுடன் கூட்டணி அமைத்து ராமதாஸ் போட்டியிடவுள்ள நிலையில், 30 வேட்பாளர்களுக்கும் 'சிலிண்டர்' சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் 🪭🪭“ஸ்டாலினுக்கு CM ஆகுற யோகம் இல்லன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க..”
-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உழைப்பு.. உழைப்பு.. உழைப்பு..
"2021 தேர்தலின்போது ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்ல. CM ஆகுற யோகம் இல்லன்னு சொல்லிட்டு திரிஞ்சாங்க.
யோகத்தை நம்பி சும்மா இருப்பவனா இந்த ஸ்டாலின்?
அதிர்ஷ்டம் இல்லன்னு அலுத்துக் கொள்பவனா இந்த ஸ்டாலின்?
நான் யோகத்தை நம்புபவன் அல்ல உழைப்பை நம்புபவன்.
-தஞ்சாவூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
🪭🪭தலையிட முடியாது"
தேர்தலில் வாக்களித்ததை உறுதிசெய்ய
SMS அனுப்ப தேர்தல் ஆணையத்துக்கு
உத்தரவிட கோரிய மனு
தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் தலையிட முடியாது என உயர்நீதிமன்றம் தள்ளுபடி
🪭🪭97% வாக்குகள் பெற்று ஜிபூட்டி அதிபர் சாதனை வெற்றி: 6-வது முறையாக அரியணை ஏறுகிறார் குயெல்லே!
ஆப்பிரிக்க நாடான ஜிபூட்டியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் இஸ்மாயில் ஓமர் குயெல்லே 97.81% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்; இதன் மூலம் 1999 முதல் நீடிக்கும் இவரது ஆட்சி மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது 🪭🪭2026-ஆம் ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) மே 4-ஆம் தேதி தொடங்கி, மே 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த 25 நாட்கள் தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருக்கும்
வானிலை மையம்
🪭🪭முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
🪭🪭பெங்களூரு அருகே புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட டெண்டர் கோரியது கர்நாடக அரசு
பெங்களூரு அருகே அனேகல் பகுதியில் 80,000 இருக்கைகள் கொண்ட புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்தைக் கட்ட டெண்டர் கோரியது கர்நாடக அரசு
ரூ.943.46 கோடியில், 75 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது.
🪭🪭தமிழ்நாட்டில் 5G சேவையை தொடங்கியது VI
தமிழ்நாட்டில் VI 5G
சென்னை மாநகரில் தனது 5G சேவையை தொடங்கியுள்ளது VI. வரும் மே மாதத்திற்குள் வேலூர், கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் சேவையை விரிவுபடுத்த திட்டம்.
மும்பை, டெல்லி, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய பகுதிகளில் தற்போது 5G சேவையை வழங்கி வருகிறது VI நிறுவனம்.
🪭🪭UPI சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர RBI முடிவு
UPI சேவைக்கு கட்டுப்பாடு
ரூ.10,000 அல்லது அதற்கு அதிகமான பணத்தை UPI மூலம் அனுப்பும் போது 1 மணி நேரம் தாமதமாக செல்லும் வகையில் மாற்றியமைக்க RBI திட்டம்.
அந்த 1 மணி நேரத்திற்குள் பயனர்கள் தேவைப்பட்டால் UPI transaction-ஐ திரும்ப பெறலாம். இணைய திருட்டு மற்றும் மோசடிகளை தடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது
🪭🪭இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2027-ல் 7.3% ஆக உயர கூடும்.! ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்பு
🪭🪭IPL2026 போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭🪭
🌹👉 1. இதயம் — தினமும் நடைபயிற்சி
இதயம் ஒரு pump. அது நாளொன்றுக்கு 1,00,000 முறை துடிக்கிறது. ஆனால் அது உனக்கு ஒரே ஒரு விஷயம் மட்டுமே கேட்கிறது — தினமும் 30 நிமிடம் நட. அவ்வளவுதான். அது போதும்.
🌹👉 2. மூளை — தரமான தூக்கம்
உன் மூளை தூக்கத்தில்தான் repair ஆகுது. நீ தூங்கும்போது மூளை toxic waste-ஐ வெளியேற்றுகிறது — இதை "glymphatic system" என்று சொல்வார்கள். 7-8 மணி நேரம் தூங்காவிட்டால் நினைவாற்றல் குறையும், முடிவெடுக்கும் திறன் மழுங்கும்.
🌹👉3. நுரையீரல் — ஆழமான சுவாச பயிற்சி
நாம் ஒரு நாளைக்கு சராசரியாக 20,000 முறை சுவாசிக்கிறோம். ஆனால் அதில் பெரும்பாலானவை shallow breathing — ஆழமில்லாத சுவாசம். ஒரு நாளில் 5 நிமிடம் மட்டும் deep breathing செய்தால் oxygen அளவு கூடும், stress குறையும், நுரையீரல் capacity வளரும்.
🌹👉4. எலும்புகள் — weight-bearing exercise
எலும்புகள் stone போல static இல்லை — அவை living tissue. Pressure கொடுக்கும்போதே அவை வலுவாகும். நடைபயிற்சி, squats, படிகள் ஏறுவது — இவை எல்லாம் எலும்புகளுக்கு உணவு. 30 வயதுக்கு பிறகு bone density குறையத் தொடங்கும் — இப்போதே கவலைப்படு.
🌹👉5. இரத்தம் — தண்ணீர் தொடர்ந்து குடி
உன் இரத்தத்தில் 90% தண்ணீர். போதுமான தண்ணீர் குடிக்காவிட்டால் இரத்தம் கெட்டியாகும், circulation slow ஆகும், ஒவ்வொரு உறுப்பும் போராடும். தாகம் எடுக்கும்போது நீ already dehydrated ஆகிவிட்டாய் என்று அர்த்தம்.
🌹👉6. தோல் — தினமும் sunscreen
UV rays என்பது வெய்யில் நேரத்தில் மட்டுமல்ல — மேகமூட்டமான நாட்களிலும் 80% UV radiation தோலை தாக்கும். தினமும் sunscreen போடுவது aging-ஐ மட்டுமல்ல, skin cancer அபாயத்தையும் குறைக்கும்.
🌹👉7. நோய் எதிர்ப்பு சக்தி — தரமான தூக்கம்
தூக்கமின்மை உன் immune system-ஐ அரிக்கிறது. ஒரே ஒரு இரவு சரியாக தூங்காவிட்டால் உன் உடலில் white blood cells உற்பத்தி குறையும். அதனால்தான் நோயாளிகளுக்கு "ஓய்வு எடு" என்று doctor சொல்கிறார்.
🌹👉 8. கல்லீரல் — பதப்படுத்தப்பட்ட உணவை குறை
கல்லீரல் உன் உடலின் chemical factory. ஒரு நாளில் 500-க்கும் மேற்பட்ட வேலைகள் செய்கிறது. Processed food, junk உணவு இதை அதிகமாக சோர்வடையச் செய்கிறது. கல்லீரல் அமைதியாக காயப்படும் — வலியில்லாமல். அதனால்தான் fatty liver பலருக்கு தெரியாமலேயே இருக்கும்.
🌹👉9. குடல் — probiotics உணவு
உன் குடலில் 100 trillion bacteria வாழுகிறது. இவை உன் mood-ஐ கூட control செய்கின்றன — ஏனென்றால் serotonin என்ற "happiness hormone" 90% குடலில்தான் உற்பத்தியாகிறது. தயிர், மோர், fermented உணவு சாப்பிடு — குடல் மகிழும், மனம் மகிழும்.
🌹👉10. பற்கள் — flossing
Brushing மட்டும் போதாது. பற்களுக்கு இடையில் உள்ள bacteria flossing இல்லாவிட்டால் போகாது. ஆய்வுகள் சொல்கின்றன — gum disease-க்கும் heart disease-க்கும் தொடர்பு உண்டு. வாய் ஆரோக்கியம் = உடல் ஆரோக்கியம்.
🌹👉11. கண்கள் — இயற்கை சூரிய ஒளி
Screen-ல் முழிக்கும் கண்களுக்கு இயற்கை ஒளி மிக முக்கியம். குழந்தைகள் வெளியில் விளையாடும்போது myopia (கண்பார்வை குறைபாடு) குறைகிறது என்று research சொல்கிறது. தினமும் 20 நிமிடம் இயற்கை ஒளியில் இரு.
🌹👉 12. கைகள் — கைகழுவுதல்
ஒரு simple பழக்கம் — சரியாக கைகழுவுவது — பல நோய்களை தடுக்கும். COVID மட்டுமல்ல, cholera, typhoid, pneumonia போன்றவை கூட. 20 seconds soap-போட்டு கழுவுவது போதும்.
🌹👉 13. தசைகள் — வாரம் 2 முறை strength training
30 வயதுக்கு பிறகு ஒவ்வொரு ஆண்டும் 3-5% muscle mass குறைகிறது — இதை "sarcopenia" என்று சொல்வார்கள். Strength training இந்த குறைவை தடுக்கும். Gym போகவேண்டியதில்லை — body weight exercises போதும்.
🌹👉14. நரம்பு மண்டலம் — தியானம்
Meditation என்பது religion மட்டுமல்ல — அது neuroscience. தினமும் 10 நிமிடம் தியானம் செய்பவர்களின் மூளையில் grey matter அதிகரிக்கிறது என்று Harvard research கண்டறிந்தது. Stress குறையும், focus கூடும், தூக்கம் நன்றாக வரும்.
🌹👉 15. ஹார்மோன்கள் — சீரான தூக்க நேரம்
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழு. உன் உடல் clock — circadian rhythm — இதை பின்பற்றும்போது cortisol, melatonin, insulin எல்லாம் சீராகும். Weekend-ல் மட்டும் தாமதமாக தூங்குவது கூட இந்த rhythm-ஐ குழப்பும்.
🌹👉16. நினைவாற்றல் — புதிய திறன்கள் கற்றுக்கொள்
மூளை ஒரு muscle போன்றது — பயன்படுத்தாவிட்டால் குறையும். புதிய மொழி கற்பது, வாசிப்பு, இசை கற்பது, புதிய route-ல் வீட்டிற்கு திரும்புவது கூட மூளையில் புதிய neural connections உருவாக்கும். இதை "neuroplasticity" என்று சொல்வார்கள்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பை கொடுப்பதிலும் பெறுவதிலும் தான் இன்பம் இருக்கிறது. என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர், மாவட்டச் செயலாளர்
&தகவல் தொழில் நுட்ப அணியின் மாநில அமைப்பாளர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926










No comments:
Post a Comment