மும்மொழிக் கொள்கையை 7 நாளில் அமல்படுத்த வேண்டும்: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அறிவுறுத்தல்


தேசிய கல்விக் கொள்​கை​யின்​படி 6-ம் வகுப்பு முதல் மும்​மொழிக் கொள்​கையை 7 நாட்​களில் செயல்​படுத்த வேண்​டுமென சிபிஎஸ்இ தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ இயக்​குநர் பிரக்யா எம்​.சிங், அனைத்து வித​மான பள்​ளி​களுக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை: 2026-27-ம் கல்​வி​யாண்டு முதல் 6-ம் வகுப்​பில் இருந்து மும்​மொழி திட்​டம் அறி​முகம் செய்​யப்​படு​கிறது.

இது​வரை அமல்​படுத்​தாத மற்ற பள்​ளி​களும், இந்த அறி​விப்பு வெளி​யான 7 நாட்​களுக்​குள் திட்​டத்தை செயல்​படுத்​து​வதை உறு​தி​செய்ய வேண்​டும். 3-வது மொழிகளுக்​கான பாடப்​புத்​தகங்​கள் விரை​வில் கிடைக்​கப்​பெறும்.

அதே​நேரம் உள்​ளூரில் கிடைக்​கும் புத்​தகங்​கள், கற்​பித்​தல் வளங்​களை பயன்​படுத்தி 6-ம் வகுப்​பில் இருந்து மும்​மொழியை பள்​ளி​கள் கற்​பிக்க வேண்​டும்.

இதுத​விர பள்​ளி​கள் தாங்​கள் தேர்ந்​தெடுத்த மும்​மொழி விவரங்​களை இறு​தி​செய்​து, தகவல் தெரிவிக்க வேண்​டும்.

ஒரு பள்ளி 6-ம் வகுப்​பில் எந்த 3-ம் மொழியை அறி​முகம் செய்​கிறதோ, அதே மொழி​தான் அந்த பள்​ளிக்​கான 9, 10-ம் வகுப்​பு​களில் விருப்​பப் பாட​மாக இருக்​கும். எனவே, அனைத்​துப் பள்​ளி​களும் மும்மொழி அமல் செய்​வதை தாமதமின்றி மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel