Subscribe Us

Sunday, May 3, 2026

மே 7-ம் தேதி குரூப்-2 5-வது கட்ட கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2 ஏ தேர்வில் 5-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு மே 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இதற்கு அழைக்கப்பட் டுள்ள தேர்வர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான அழைப்பாணையை தேர்வர்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மட்டும் தகவல் தெரிவிக்கப்படும்.

குறிப்பிட்ட நாளில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed