Subscribe Us

Monday, June 29, 2026

கல்வி அலுவலர்களுக்கான பள்ளிப் பார்வை குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் - DSE, DEE, SCERT - Joint Proceedings

1 முதல் 12 வகுப்பு வரை கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டத்தினை மாற்றியமைக்குமாறு இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது. பார்வை 2 இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசாணையில் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கு 1 முதல் 3 வகுப்பு வரை புதிய பாடநூல்களை மாற்றியமைக்க இந்நிறுவனத்திற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தொடர்ந்து. 2026-27ஆம் கல்வியாண்டில் 1 முதல் 3 வரையிலான வகுப்புகளுக்கு முதல் பருவத்திற்கான புதிய பாடநூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வகுப்புகளில் பள்ளிப்பார்வையை மேற்கொள்ளும் CEO/DEO/BEO/BRTE போன்ற அனைத்து கல்வி அலுவலர்களுக்குமான வழிகாட்டு நெறிமுறைகள். இத்துடன் இணைத்து அனுப்பப்படுகின்றது.

இத்துடன் ஆசிரியர் பதிவேடு (Logbook) குறித்த விவரங்களும், பாடவாரியான பள்ளிப்பார்வைப் படிவங்களும் இணைக்கப்பட்டுள்ளன. பள்ளிப் பார்வை மேற்கொள்ளும் கல்வி அலுவலர்கள் இவற்றை முறையாகப் பின்பற்றி, வகுப்பறைக் கற்பித்தலை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிப் பார்வையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

இணைப்பு - வழிகாட்டல் நெறிமுறைகள், ஆசிரியர் பதிவேடு மற்றும் பள்ளிப் பார்வைப் படிவம்.

No comments:

Post a Comment

Popular Feed