Subscribe Us

Monday, August 31, 2026

டி.என்.பி.எஸ்.சி வேலை வாய்ப்பு; 170 பணியிடங்கள் - தகுதி, தேர்வு முறை என்ன? விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் இங்கே


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் அடங்கிய நேர்முகத் தேர்வு பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 170 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

துறைமுக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor Degree in Nautical Science (or) Applied Nautical Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 30

அலகு தலைவர் – துணை பொது மேலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E / B.Tech., in Mechanical / Chemical / Electrical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 20 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
நீங்க விரும்பும் செய்திகள்


சம்பளம்: நிலை – 28

உதவி பொது மேலாளர் (நிதி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Chartered / Cost Accountant preferably with Post Graduate qualification in Industrial / Business Management படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 27

துணை மேலாளர் (கருவி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.E / B.Tech., Instrumentation படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

துணை மேலாளர் (பாதுகாப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E. / B.Tech., in Mechanical/ Chemical/ Electrical மற்றும் Diploma in Safety Management or M.Tech. in Industrial Safety படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

நிதி ஆலோசகர் மற்றும் நிறுவனச் செயலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: ACS. & Associateship of the Institute படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) திட்ட மேலாண்மை

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering with MBA படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) உள்கட்டமைப்பு

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Civil Engineering / Architecture/ Planning with MBA படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

உதவி பொது மேலாளர் (திட்டங்கள்) முதலீடு

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate degree with Chartered Accountant or MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 25

மேலாளர் (கணக்குகள்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: CA/ICWA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 23

ஆராய்ச்சி உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: M.V.Sc., (Micro-biology / Pathology / Parasitology / Dairy Micro-biology / Animal Biotechnology) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

கால்நடை உதவி மருத்துவர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 79

கல்வித் தகுதி: B.V.Sc., Degree / B.V.Sc., & A.H படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

நிதியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate Degree in Public Administration (or) Post Graduate Degree in Business Administration (MBA) படித்திருக்க வேண்டும். மேலும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை - 22

உதவி இயக்குநர் புள்ளியியல்

காலியிடங்களின் எண்ணிக்கை: 4

கல்வித் தகுதி: Degree in Statistics or Mathematics or Economics or Applied Economics or Business Economics படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

மண்டல பெருந்தச்சன்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: Bachelor of Technology in Traditional Architecture or Bachelor of Fine Arts in Traditional Sculpture படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

ஆங்கில நிருபர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

தமிழ் நிருபர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

உதவி இயக்குநர் (தொழில்கள் மற்றும் வர்த்தகம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

முதுநிலை பூச்சியியல் வல்லுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 13

கல்வித் தகுதி: B.Sc.(Hons.) or M.A. Degree or the M.Sc. degree in Zoology or M.Sc., Degree in Medical Entomology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

மாவட்ட நூலக அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Master's degree in Library Science or Library and Information Science படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

உதவி இயக்குநர் (நகர் மற்றும் ஊரமைப்பு)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Post Graduate Degree in Town or City or Urban or Housing or Country or Rural or Infrastructure or Regional or Transport or Environmental Planning (or) B.E Degree (Civil or Highway) or Bachelor of Planning or Bachelor of Technology in Planning படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

முதுநிலை அலுவலர் (தொழில்நுட்பம்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 10

கல்வித் தகுதி: B.E., / B.Tech., /AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

முதுநிலை அலுவலர் (நிதி)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி: CA /ICWA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

துணிநூல் உதவி இயக்குநர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Tech Textile Technology (or) B.Tech Handloom and Textile Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

உளவியலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master’s Degree in Psychology படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

உதவி செயலாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree with Associate Company Secretary படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருடங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

கணக்கு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Chartered Accountants படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம்: நிலை – 22

உதவி மேலாளர் (பொது) தொழில்

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Post Graduate in Statistics or Economics படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

உதவி மேலாளர் (தொழில்)

காலியிடங்களின் எண்ணிக்கை: 6

கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical / Electrical and Electronics / Computer Science and Engineering / Information Technology / Electronics and Communication Engineering) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

உதவி மேலாளர் (நிதி) தொழில்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Institute of Chartered Accountants / Cost Accountants or MBA (Finance) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: நிலை – 22

கணினி பகுப்பாய்வாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E Degree in Computer Science or B.E Degree in Electronics and Communication or B.E Degree in Electrical and Electronics or B.Tech in Information Technology or A Master Degree in Computer Application or A Master Degree in Computer Science படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்

சம்பளம்: நிலை – 22

வயதுத் தகுதி: 01.07.2026 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு வயது வரம்பு கூடுதலாக இருக்கும். எஸ்.சி (SC), எஸ்.சி.ஏ (SC(A)), எஸ்.சி (ST), எம்.பி.சி (MBC), பி.சி (BC), பி.சி.எம் (BCM) பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம்: எழுத்துத் தேர்வு ரூ.100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி, எம்.பி.சி, பி.சி.எம், பி.சி மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.10.2026

No comments:

Post a Comment

Popular Feed