பொறியியல் டிப்ளமா தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சான்றிதழ்களை இதுவரை பெறாத பாலிடெக்னிக் கல்லூரிகள் இன்று முதல் செப்.3 வரை பெற்றுக்கொள்ளலாம் என தொழில்நுட்பக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்கக உதவி இயக்குநர் (தேர்வுகள்) அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற டிப்ளமா தேர்வுகளை (ஆர்.2023 திட்டம்) எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களின் தற்காலிக சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலை ஆக.3 முதல் 7-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளும் அறிவுறுத்தப்பட்டன. ஆனாலும், பல கல்லூரிகள் இதுவரை இவற்றைப் பெறவில்லை.
மாணவர்களின் டிப்ளமா சான்றிதழ்களும் தற்போது தயார் நிலையில் இருப்பதால் அவர்களுக்கு விரைவாக வழங்கும் பொருட்டு கல்லூரியின் பிரதிநிதியை உரிய அனுமதி கடிதத்துடன் அனுப்பி, ஆக.31 (இன்று) முதல் செப்.3 வரை தற்காலிக சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் மற்றும் டிப்ளமா சான்றிதழ்களை தொழில்நுட்பக் கல்வி இயக்கக கணினி பிரிவில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment