CBSE sample question papers PDF விடைகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் மற்றும் எப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதை விளக்கக்கூடிய குறிப்புகளும் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
/indian-express-tamil/media/media_files/2026/09/22/cbse-sample-papers-2027-cbse-class-10-sample-papers-cbse-marking-scheme-2027-2026-09-22-15-44-38.jpg)
CBSE 2027 பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மதிப்பெண் திட்டம் வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), வரவிருக்கும் 2026-27 கல்வி ஆண்டுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மதிப்பெண் வழங்கும் முறையை அதிகாரப்பூர்வ கல்வி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி இரண்டு வகுப்புகளுக்கும் தனித்தனிப் பாட வாரியாக மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாணவர்கள் வினாத்தாள் வடிவம், கேள்விகளின் வகைகள், பிரிவு வாரியான கட்டமைப்பு மற்றும் மதிப்பெண் பங்கீடு ஆகியவற்றை இதன் மூலம் முழுமையாகப் புரிந்து கொள்ளலாம்.
விடைகள் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும் மற்றும் எப்படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பதை விளக்கக்கூடிய குறிப்புகளும் உடன் இணைக்கப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளுக்கான விரிவான கால அட்டவணை அக்டோபர் 2026-க்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 21 அன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பின்படி, தேர்வு மதிப்பீட்டு முறையிலோ அல்லது தேர்ச்சி பெறுவதற்கான விதிகளிலோ எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை என்று சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது. முந்தைய 2025-26 கல்வி ஆண்டில் பின்பற்றப்பட்ட அதே விதிமுறைகள் மற்றும் அளவுகோல்கள்தான் நடப்பு கல்வி ஆண்டிற்கும் தொடரும்.
மாதிரி வினாத் தாள்களைப் பதிவிறக்கம் செய்வது எப்படி?
மாணவர்கள் கீழ்க்கண்ட எளிய வழிமுறைகளைப் பின்பற்றி மாதிரி வினாத்தாள்களைப் பெற்றுக்கொள்ளலாம்:
படி 1: சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ கல்வி இணையதளத்திற்குச் செல்லவும்.
படி 2: முகப்புப் பக்கத்தில் உள்ள தற்போதைய கல்வி ஆண்டிற்கான மாதிரி வினாத்தாள்கள் (Sample question papers for classes X & XII for the current academic session 2026-27) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
படி 3: திரையில் தோன்றும் செய்திக்குறிப்பை அணுகவும்.
படி 4: உங்கள் வகுப்புக்கேற்றவாறு பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு மாதிரி வினாத்தாள்களுக்கான இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும் (CBSE Class 10 Sample Papers 2026-27” அல்லது “CBSE Class 12 Sample Papers 2026-27).
படி 5: உங்களுக்குத் தேவையான பாடத்தைத் தேர்வு செய்யவும்.
படி 6: மாதிரி வினாத்தாள் மற்றும் மதிப்பெண் திட்டத்திற்கான பி.டி.எஃப். கோப்பை பதிவிறக்கம் செய்து எதிர்கால பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்ளவும்.
தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வரவிருக்கும் பொதுத்தேர்வு குறித்த கூடுதல் விபரங்களைத் தெரிந்துகொள்ள வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தொடர்ந்து பார்வையிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.










No comments:
Post a Comment