Search This Blog

Wednesday, September 9, 2026

செப்டம்பர்-2025 ல் TET தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் ஆசிரியர்கள் கவனத்திற்கு!

0 comments

1️⃣ *தகுதிகாண் பருவம் பணியேற்ற மூன்று ஆண்டுகள் தொடர் பணிக்காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க வேண்டும்!*
Education

2️⃣ *தகுதிகாண் பருவத்தில் உள்ளவர்கள் தற்செயல் விடுப்பு(12), மத விடுப்பு(3) துய்க்கலாம்*

_மருத்துவ விடுப்பு கிடையாது, ஈட்டிய விடுப்பு கிடையாது_

*தவிர்க்க இயலாத சூழலில் மருத்துவ சிகிச்சை பெற்று, அசாதாரண விடுப்பு துய்த்தால் தகுதிகாண் பருவம் எத்தனை நாட்கள் விடுப்பு எடுக்கிறோமோ அத்தனை நாள்கள் தள்ளிப் போகும்!*

3️⃣ *ஆண்டு ஊதிய உயர்வு உண்டு*

4️⃣ *பொங்கல் போனஸ் 240 நாள்கள் பணிபுரிந்தால் உண்டு*

_அதாவது ஜனவரி மாதம் முதல் டிசம்பர் வரை ஒரு ஆண்டு பணிபுரிய வேண்டும்_

5️⃣ *ஈட்டிய விடுப்பு ஒரு ஆண்டு இடைவெளியில் 15 நாள்கள் ஒப்படைப்பு செய்து பணப் பலன்கள் பெறலாம்*
( EX: செப்டம்பர்-2025 முதல் ஆகஸ்ட் 31 வரை - 1 ஆண்டுகள் பூர்த்தி ஆக வேண்டும்)

6️⃣ *தகுதிகாண் பருவ காலத்தில் உயர்கல்வி பயில அனுமதி உண்டு*

_ஆனால், அவ்வாறு செல்லும் போது...எடுக்கப்படும் விடுப்பு (அரைச்சம்பள விடுப்பு) தகுதிகாண் பருவ காலத்தில் நீட்டிக்கப்படும்

No comments:

Post a Comment