அதிகாரம்:50.இடன் அறிதல்
குறள் எண்:500
குறள்:
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
பொருள்:
வேல் ஏந்திய வீரரைக் கோர்த்தெடுத்த கொம்பு உடைய யானையையும், கால் ஆழும் சேற்று நிலத்தில் அகப்பட்ட போது நரிகள் கொன்றுவிடும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. காகம் ஒற்றுமையையும், தேனீயும் எறும்புகளும் சுறுசுறுப்பையும் போதிக்கின்றன.
பொன்மொழி :
Thought for the Day :
Heart Day: “Care for your heart; cherish every heartbeat.”
பொது அறிவு :
English words :
1. Prudent– Sensible – விவேகமான
2.. Reluctant– Unwilling – தயங்குகிறl
புவியியலும் சுற்றுசூழலும் :
NMMS :
MAT
பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
(1) காக்கசாய்டு - யுரேசியா
(2) நீக்ராய்டு - வட அமெரிக்கா
(3) மங்கோலாய்டு - ஆசியா
(4) ஆஸ்ட்ரலாய்டு - ஆஸ்திரேலியா
விடை: (2) நீக்ராய்டு - வட அமெரிக்கா
செப்டம்பர் 23
நீதிக்கதை
🌙 கனவை க் கண்டு பயந்த கவின்
ஒரு சிறிய கிராமத்தில் கவின் என்ற சிறுவன் தனது பெ ற்றோருடன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் அன்பானவனாகவும், புத்திசாலியாகவும் இருந்தான்.
ஒருநாள் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது கவினுக்கு ஒரு பயமுறுத்தும் கனவு வந்தது. கனவில் ஒரு பெரிய இருண்ட காட்டில் அவன் தனியாக இருப்பது போலத் தோன்றியது. திடீரென்று ஒரு பெரிய உருவம் அவனை நோக்கி வருவது போல தெ ரிந்தது. பயந்து விழித்த கவின், “அம்மா!” என்று அழைத்தான். உடனே அவனுடைய அம்மா அறைக்குள் வந்து அவனைத் தேற்றினார்.
“என்ன ஆச்சு கவின்?” என்று கேட்டார்.
“அம்மா, எனக்கு மிகவும் பயங்கரமான கனவு வந்தது. இன்னும் அந்தக் கனவு நினைவுக்கு வந்து பயமாக இருக்கிறது,” என்றான் கவின்.
அம்மா அவனிடம், “கண்ணா, அது வெறும் கனவுதான். நாம் தூங்கும்போது நம் மனதில் தோன்றும் காட்சிகள்தான் கனவுகள். அவை உண்மையில் நடப்பவை அல்ல. அதனால் பயப்பட வேண்டாம்,” என்று அன்புடன் கூறினார்.
அதன்பிறகு கவின் ஆழமாக மூச்சை இழுத்து விட்டான். அம்மாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு மீண்டும் அமைதியாகப்படுத்தான்.
அடுத்த நாள் காலை எழுந்ததும், நேற்று இரவு பயந்ததை நினைத்து சிரித்தான்.
“கனவு என்னை பயமுறுத்த முயன்றது. ஆனால் அது உண்மையல்ல என்பதை இப்போது புரிந்துக் கொண்டே ன்!” என்று தன்னை த்தானே சொல்லிக்கொண்டான்.
அதன்பிறகு எப்போதாவது பயமுறுத்தும் கனவு வந்தாலும், கவின் உடனே பெற்றோரிடம் சொல்லி, அது வெறும் கனவு என்பதை நினைத்துக் கொண்டு அமைதியாகிவிடுவான்.
நீதி: 🌟 கெட்ட கனவுகள் உண்மையல்ல. அவற்றைக் கண்டு பயப்படாமல், தைரியமாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்











No comments:
Post a Comment