Thamizhkadal WhatsApp Channel

தமிழக பள்ளிகளில் வாரத்திற்கு 3 பீரியட் இதற்கு ஒதுக்கியே ஆகணும்: அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் வாரத்திற்கு 3 முறை கட்டாயம் விளையாட்டு பீரியட் மற்றும் 2 இரண்டு பாடமேற்பட்ட மற்றும் இணைச் செயல்பாடுகள் பீரியட் (Extra-curricular and Co-curricular activities) கட்டாயமாக இடம்பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்ததில் இருந்து பள்ளிகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முக்கியமாக விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு பீரியட் வழங்க வேண்டும் என்றும், இந்த பீரியட் நேரத்தில் மற்ற பாடத்திற்கான வகுப்புகள் எடுக்க கூடாது. மற்ற பாட ஆசிரியர்கள் விளையாட்டு பீரியட்களை தங்களது பாடத்தை நடத்திட பயன்படுத்த கூடாது என்று கூறப்பட்டது.

இந்த வரிசையில், தற்போது பள்ளிகளில் வாரத்திற்கு 3 பீரியட் விளையாட்டுக்கும், 2 பீரியட் பாடமேற்பட்ட மற்றும் இணைச் செயல்பாடுகளுக்கும் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தற்போது, மூன்று உடற்கல்வி பாடவேளைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. மேலும், பாடமேற்பட்ட செயல்பாடுகளுக்காக ஒதுக்கப்பட்ட மற்ற இரண்டு பாடவேளைகளையும் உடற்கல்வி பாடவேளைகளாக மாற்றிக்கொள்ள முடியும்.

இதன் மூலம் மாணவர்கள் வாரத்தில் ஐந்து நாட்களும் விளையாடுவதை உறுதிசெய்ய முடியும்,” என்று கூறினார். இந்த முடிவிற்காக அமைச்சர் ராஜ்மோகன் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் பாடத்திட்டம், சுகாதாரம் மற்றும் வசதிகள் குறித்து அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடனும் அமைச்சர் ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories