தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் நிபந்தனை தளர்வு



திருமணமாகி வெளிமாநிலத்தில் இருந்தாலும் தாய் - தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்தால் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் பயன்பெறலாம்.

இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது, தமிழ்நாட்டுப் பெண்கள் திருமணத்திற்குப் பின்னர் வேறு மாநிலத்தில் வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசித்து வரும் நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு வந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் மேற்கொள்ளும் சில நிகழ்வுகள் அரசின் கவனத்திற்கு வந்தன. இதனைக் கருத்தில் கொண்டு, அரசு இத்திட்டத்தின் நிபந்தனைகளை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தையின் தாய் தமிழ்நாட்டில் பிறந்து, திருமணமாகி வெளிமாநிலத்திற்கு சென்றிருந்தாலும், அத்தாயின் தாய் – தந்தை இருவரும் தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிப்பவர்களாக இருந்து, அதற்கான உரிய ஆவண ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டால், அந்த குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் உடன் வழங்கப்படும்.

அதன்படி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவித்த உமா மகேஸ்வரி குழந்தைக்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இந்த திருத்தம் கடந்த ஜூன் மாதம் 22ம் தேதி முதல் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories