
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
Employment News
» ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு
ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு
/indian-express-tamil/media/media_files/2025/10/10/tnrd-recruitment-2025-panchayat-secretary-job-2025-10-10-14-42-18.jpg)
தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு வட்டாரங்களில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் 16.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 22
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் குறைந்தபட்சம் சான்றிதழ் படிப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,750
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2026/09/17903342512563.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: இணை இயக்குநர்/ திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் – 628101, தூத்துக்குடி மாவட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.10.2026









No comments:
Post a Comment