Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 21, 2018

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு


துணை மருத்துவ டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான கலந்தாய்வு நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளி வைக்கப்படுவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக கூடுதல் மருத்துவக் கல்வி இயக்குநர் மற்றும் செயலர் (தேர்வுக் குழு) டாக்டர் கோ.செல்வராஜன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 23) முதல் புதன்கிழமை (நவ. 28) வரை நடைபெற இருந்த துணை மருத்துவ டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிர்வாகக் காரணங்களுக்காக தள்ளி வைக்கப்படுகிறது.



கலந்தாய்வு தேதி விவரம்: (ஏற்கெனவே கலந்தாய்வு அறிவிக்கப்பட நாள்கள் - மாற்றம் செய்யப்பட்ட கலந்தாய்வு நாள்கள்)

23-11-2018 ------3-12-2018
24-11-2018 ----- 4-12-2018
26-11-2018 ----- 5-12-2018
27-11-2018 ----- 6-12-2018
28-11-2018 ----- 7-12-2018



செவிலியர் டிப்ளமோ கலந்தாய்வு ஒத்திவைப்பு:

அரசு பல்நோக்கு மருத்துவமனையில் வரும் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த செவிலியர் டிப்ளமோ (பெண்கள் மட்டும்) படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வும் நிர்வாகக் காரணங்களுக்காக வரும் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.



No comments:

Post a Comment