Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 21, 2018

தேசிய திறனாய்வுத் தேர்வு: தற்காலிக விடைக் குறிப்பு வெளியீடு


தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.



பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ- நிலை 1) தமிழகத்தில் கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. இத்தேர்வில் 1.59 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர்.

தற்போது இந்தத் தேர்வு தொடர்பான தற்காலிக விடைக்குறியீடு (Tentaive Key answer) அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதள முகவரியில் (www.dge.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.



மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த விடைக்குறியீடு சார்பாக மாற்றுக் கருத்துகள் ஏதேனும் இருப்பின் அவற்றை directordge.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 26-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.



No comments:

Post a Comment