JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

பொதுவாக மீன் சாப்பிடுவது நம் உடல் நலத்திற்கு நன்மை சேர்க்கும் .வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள மக்கள் அதிகம் மீனை தங்களின் உணவில் சேர்ப்பதால் அங்கிருக்கும் மக்களிடையே இதய நோய் மற்றும் சர்க்கரை நோய் தாக்கம் குறைவாக உள்ளது .மீனில் நம் உடலுக்கு தேவையான ஒமேகா 3போன்ற சத்துக்கள் உள்ளதால் நமக்கு நன்மை சேர்க்கும் .மேலும் மீனில் நம் மனசோர்வை போக்கும் பல ஊட்ட சத்துக்கள் உள்ளதால் அவை நன்மை பயக்கும் .
1.இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற பல்வேறு காரணங்களுக்காக ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
2. இந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்கோப்பாக வைத்துகோள்ள மருத்துவர்கள் பல்வேறு ஆலோசனையை வழங்கி வருகின்றனர்.
3.இதன்படி மீன், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளவேண்டும் .இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
4.அதிக அளவு உப்பு உணவில் சேர்ப்பது , புகைப்பிடிப்பது, மது அருந்துவது ஆகியவையும் இதயத்தை ஆரோக்கியத்துடன் வைத்துகொள்ள உதவும்.
5.மேலும் தினமும் தியானம், யோகா ஆகியவற்ரை செய்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்
No comments:
Post a Comment