Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 28, 2023

பல்கலையில் வேலை விண்ணப்பம் வரவேற்பு


புதுச்சேரி பல்கலையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.உடற்கல்வி இயக்குனர், சிஸ்டம் மேலாளர், வேலைவாய்ப்பு அலுவலர், மக்கள் தொடர்பு அலுவலர், தணிக்கை அலுவலர், தோட்டக்கலை நிபுணர் ஆகிய தலா ஒரு பதவியும், மருத்துவ அதிகாரி-2, டேட்டா என்டரி ஆபரேட்டர்- 5, டிரைவர்- 14, எம்.டி.எஸ் ஊழியர்கள் -49 உட்பட மொத்தம் 109 பணிகள் நேரடி ஆட்சேர்ப்பு முறையில் நிரப்பப்பட உள்ளன.சி.டி.சி டீன் - 1, தொழில் நுட்ப அலுவலர் - 1, ஆராய்ச்சி உதவியாளர் -4. உள்ளிட்ட 28 பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

இந்த காலி பணியிடங்கள் குறித்த விபரம் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வருகிற 7-ம் தேதி வரை தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களை இணையதளத்தில் பார்வையிடலாம் என பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment