Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 28, 2023

இளநிலை யோகா படிப்பு இரண்டாம் கட்ட கலந்தாய்வு



இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ், சென்னை அரும்பாக்கத்திலும், செங்கல்பட்டிலும், அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லுாரிகள் உள்ளன. அதேபோல, 17 தனியார் கல்லுாரிகளும் உள்ளன. அரசு கல்லுாரிகளில், 160 இடங்களும், தனியார் கல்லுாரிகளில், 1,500 இடங்களும் உள்ளன. அவற்றில், 960 இடங்கள் மாநில அரசுக்கும், 540 இடங்கள் நிர்வாகத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.


இந்த இடங்களில், ஐந்தரை ஆண்டு கால யோகா, இயற்கை மருத்துவ படிப்பான பி.என்.ஒய்.எஸ்.,க்கான கலந்தாய்வு சமீபத்தில் நடந்தது. அதில், அரசு கல்லுாரிகளுக்கான அனைத்து இடங்களும் நிரம்பின. தனியார் கல்லுாரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 125ம், நிர்வாக ஒதுக்கீட்டில், 187 இடங்களும் காலியாக உள்ளன. அவற்றை நிரப்பும் வகையில், அடுத்த வாரம் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடக்க உள்ளது.

No comments:

Post a Comment