டிசம்பர் மாதத்திற்குள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து, ஜனவரி மாதத்திற்குள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/11/28/pgtrb-result-trb-certificate-verification-pgtrb-cv-list-pgtrb-job-tamil-nadu-teacher-recruitment-trb-result-check-2025-11-28-13-46-37.jpg)
PGTRB Result| TRB Certificate Verification| PGTRB CV List |Tamil Nadu Teacher Recruitment
பல்வேறு குழப்பங்களுக்கும், கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான (PGTRB) தேர்வு முடிவுகளை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது..
சான்றிதழ் சரிபார்ப்புக்கு (CV) அழைக்கப்படுவோர் யார்?
தேர்ச்சி பெற்றவர்கள் டிஆர்பி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள போர்ட்டலுக்குச் சென்று, தங்கள் பாடப்பிரிவின் (Subject-wise) முடிவுகளைப் பார்க்கலாம்.
அந்தப் பட்டியலில், சான்றிதழ் சரிபார்ப்புக்கு (Certificate Verification) அழைக்கப்படும் தேர்வர்களின் பெயர்களுக்குப் பக்கத்தில் 'CV' என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாகவே, 85, 90, 100-க்கும் கூடுதலாக மதிப்பெண் பெற்றவர்கள் அடுத்த கட்ட நகர்வுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில், அவர்கள் இப்போது சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தயாராக வேண்டும்.
பணி நியமனம் எப்போது?
ஒரு அதிகாரமற்ற தகவல் என்றாலும், டிசம்பர் மாதத்திற்குள் சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்து, ஜனவரி மாதத்திற்குள் அனைவரும் அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்வதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்
சான்றிதழ் சரிபார்ப்புக்குச் செல்பவர்கள், பின்வரும் ஆவணங்களின் அசல் சான்றிதழ்களை (Original Certificates) தயாராக வைத்திருக்க வேண்டும்:கல்விச் சான்றிதழ்கள்:
10 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் (Mark Sheet).
+2 மதிப்பெண் பட்டியல்.
யு.ஜி. டிகிரி மற்றும் மார்க்ஷீட் (Cumulative Mark Sheet இருப்பது நல்லது).
பி.ஜி. டிகிரி மற்றும் மார்க்ஷீட்.
பி.எட். டிகிரி மற்றும் மார்க்ஷீட்.
2. சமூகச் சான்றிதழ் (Community Certificate): இது மிகவும் அவசியம்.
3. பட்டச் சான்றிதழ்கள் (Degree Certificates):
பட்டமளிப்புச் சான்றிதழ் (Convocation/Degree Certificate) இல்லாதவர்கள், தற்காலிகச் சான்றிதழைப் (Provisional Certificate) பயன்படுத்தலாம்.
நிரந்தரச் சான்றிதழைப் பெற தாமதமானால், தற்காலிகச் சான்றிதழைக் கொடுத்துவிட்டு, விரைவில் சமர்ப்பிப்பதாக ஒரு 'விருப்பக் கடிதம்' (Willing Letter) எழுதித் தரலாம். இது ஏற்றுக்கொள்ளப்படும்.
4. நன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate): கடைசியாகப் படித்த கல்வி நிறுவனத்திலிருந்து பெறப்பட்டது (அதிகபட்சம் TC-யிலும் குறிப்பிடப்பட்டிருக்கலாம்).
5. அடையாளச் சான்று (ID Proof): ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடி கார்டு.
6. சிறப்பு இடஒதுக்கீடு சான்றிதழ்கள்: தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் (PSTM), படையினர் சார்ந்த சான்றிதழ்கள் போன்ற எந்தக் கோட்டாவில் விண்ணப்பித்துள்ளீர்களோ, அதற்கான சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
7. இதர ஆவணங்கள்:
அனைத்து அசல் சான்றிதழ்களிலும் குறைந்தது 5 செட் ஜெராக்ஸ் நகல்கள்.
போட்டோக்கள் (8 முதல் 16 பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்கள்).



No comments:
Post a Comment