THAMIZHKADAL TODAY NEWS

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி



திருச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் ஓவியப் போட்டி

தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசு



அனுமதி இலவசம். அனைவரும் பங்கேற்கலாம் .

டிசைன் ஒவியப் பள்ளி திருச்சி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளிடையே உள்ள ஓவியத் திறனை ஊக்குவிக்கும் வகையில் மாபெரும் ஒவியப் போட்டியினை திருச்சியில் நடத்துகிறது.
திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்துப் பள்ளி மாணவ, மாணவிகளும் போட்டியில் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். பள்ளியில் படிப்பதற்கான அடையாளச் சான்றிதழ் அல்லது அடையாள அட்டை உள்ள மாணவர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும். போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உறுதுணையுடன் சொந்த பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். போட்டியில் கேட்கப்படும் தலைப்பில் மட்டும் ஓவியம் இருக்க வேண்டும்.



ஓவியத்திற்கு வண்ணம் தீட்டக் கூடிய வண்ணக்கலர்கள், காகிதப் பென்சில் உள்ளிட்ட உபகரணங்கள் போட்டியாளரே கொண்டு வர வேண்டும். எல்.கே.ஜி, யூ.கே.ஜி பயிலும் மாணவர்கள் கொடுக்கப்படும் படத்திற்கு வண்ணம் தீட்ட வேண்டும். முதல் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆரோக்கிய உணவு தலைப்பிலும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் சாலை பாதுகாப்பு தலைப்பிலும், ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் எனது இந்தியா தலைப்பிலும் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட வேண்டும். போட்டியானது ஆகஸ்ட் 4, 5 தேதிகளில் திருச்சி, மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ரம்யாஸ் ஹோட்டல் சௌபாக்யா குளிரங்கில் காலை 11 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும். போட்டியாளர் மேற்கண்ட நேரத்தில் ஏதேனும் ஒரு மணி நேரத்தில் போட்டியில் பங்கேற்கலாம் . பங்கேற்பாளர் அனைவருக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழும், வெற்றியாளர்க்கு பாராட்டுச் சான்றிதழும் பரிசுகளும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9842299412,
9566673472 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Share:

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel