JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Wednesday, May 13, 2026

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசின் "பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு எழுதலாம்" என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஆசிரியர்களும், தமிழ்நாடு அரசின் "பணி புரியும் ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு எழுதலாம்" என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக தமிழ்நாட்டில் அரசு / அரசு உதவி பெறும் /தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கை எண்.01/2026 இவ்வாரிய இணையதளத்தில் 13.02.2026 அன்று வெளியிடப்பட்டது.

இந்நிலையில், புதுச்சேரி அரசு, பள்ளிக்கல்வித் துறை செயலரின் நேர்முக கடித στ σττ.Α/4719/2025-0/0 Superintendent DSE/E1, .30.03.2026 श्री श्री பிரதேசத்திற்குட்பட்ட அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வருகின்ற ஆசிரியர்களுக்கு மேற்படி நடைபெறவுள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு-2026இல் பங்கேற்க அனுமதி கோரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசுக் கடித எண்.2144/TRB/2026-2, நாள்.07.04.2026 மற்றும் 30.04.2026இல் வழங்கப்பட்டுள்ள அனுமதியின் அடிப்படையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட அரசு/அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வருகின்ற தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு மட்டும் மேற்குறிப்பிடப்பட்டுள்ள அறிவிக்கையின்படி நடைபெற உள்ள தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-I மற்றும் தாள்-IIற்கு இவ்வாரிய இணையதளத்தில் (www.trb.tn.gov.in) விண்ணப்பிக்க 13.05.2026 முதல் 27.05.2026 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. இத்தகுதித் தேர்வு சார்ந்த கூடுதல் விவரங்கள் மேற்கண்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி அரசு, பள்ளிக் கல்வித்துறை செயலரின் நேர்முக கடித எண்.M-17076 (76)/33/2026-Academic Wing-JD/DSE, . 1105.2026, पी श्री பிரதேசத்திற்குட்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் இவ்வாரியத்தால் நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்கவும், தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் புதுச்சேரி அரசிற்கு வழங்கவும் கோரப்பட்டுள்ளதன் அடிப்படையில், இவ்வறிவிக்கை எண் 01B/2026, 12.05.2026 அன்று வெளியிடப்படுகின்றது.

No comments:

Post a Comment