THAMIZHKADAL TODAY NEWS

AI தொழில்நுட்பத்தால் பேரபாயம்

AI-ஆல் பேராபத்துகள் இருப்பது உண்மையே, இவ்வளவு காலம் சில உண்மைகளை மறைத்து நேர்மறையாக மட்டுமே AI நிறுவனங்கள் சித்தரித்து வந்ததாக Anthropic CEO Dario Amodei பகீர் வாக்குமூலம்!

மிகவும் சக்திவாய்ந்த AI மாடல்களை முடக்க முயற்சித்தாலும், அதையும் மீறி சுயமாகச் செயல்படும் திறன் கொண்டவை என்பது மாதிரி சோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

AI-யின் அதிவேக வளர்ச்சிக்கு ஏற்ப கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு விதிகள் இன்னும் முழுமையடையாததால், Al உருவாக்கத்தின் வேகத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
*💥 கட்டுப்பாட்டை மீறும் AI வேண்டாம்!*

மனிதகுலத்திற்கு உதவாத, மனிதக் கட்டுப்பாட்டில் இல்லாத AI தொழில்நுட்பத்தை உருவாக்குவது வீண் என Microsoft CEO சத்ய நாதெல்லா அதிரடி கருத்து!

"SUPER-INTELLIGENCE போன்ற AI மாடல்கள் மனிதர்களின் முழு கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்க வேண்டும்; AI துறையை சீரமைக்க அதன் வளர்ச்சி வேகத்தை குறைக்க வலியுறுத்திய பிற நிறுவனங்களின் அழைப்பை நான் வரவேற்கிறேன்.

Microsoft-ன் Al மாடல்களுக்கான புதிய நடத்தை விதிகளை மக்களின் கருத்துக்காக வெளியிட உள்ளோம்; அதேபோல் AI-ன் பயன்கள் சில நிறுவனங்களின் கைகளில் மட்டும் முடங்காமல், அனைத்து நாடுகளுக்கும் பரவலாகச் சென்றடைய வேண்டும்”


Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel