THAMIZHKADAL TODAY NEWS

அரசுப் பள்ளியில் திடீர் ஆய்வு - மாணவர்களுக்கு பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்


கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன் புதூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வருகை தந்தார். பள்ளிக்கு வந்த ஆட்சியருக்கு மாணவ மாணவிகள் கைதட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள சமையலறைக்கு நேராக சென்று அங்கு மாணவர்களுக்கு தயாரிக்கப்பட்டிருந்த உணவு மற்றும் சாம்பாரை பார்வையிட்டு மாணவர்களுக்கு சமைத்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்டு சுவைத்து பார்த்து மாணவர்களுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார்.

சாம்பாரில் என்ன என்ன பொருட்கள்?

மேலும் சாம்பாரில் என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது என அங்கிருந்த சத்துணவு பணியாளிடம் விளக்கம் கேட்டறிந்தார். அதன் பின்னர் அங்கிருந்து பள்ளி வகுப்பறைக்கு சென்ற மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி மாணவிகளை அழைத்து வாய்ப்பாடு சொல்ல கூறினார். அப்போது மாணவிகளும் மாவட்ட ஆட்சியரிடம் வாய்ப்பாடுகளை நன்றாக ஒப்பித்தனர்.


நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்

அதன் பின்னர் அங்கிருந்த பள்ளி மாணவர்களிடம் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என ஒவ்வொருவரிடமும் கேள்விகளை கேட்டார். அப்போது மாணவர்கள் போலீஸ், இன்ஜினியர் என ஒவ்வொருவராக கூறினார் அதனைத் தொடர்ந்து மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுரை கூறி விட்டு பொள்ளாச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை பார்வையிட சென்றார்.

சமூக அறிவியல் வகுப்பினை எடுத்த மாவட்ட ஆட்சியர்..! அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட போது மாணவ மாணவியர்களுக்கு பாடம் எடுத்த பின், மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நிகழ்வு முறை வழியில் பாடங்களை சொல்லித் தர வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார் மாவட்ட ஆட்சியர்..!

➤கிணத்துக்கடவு, அரசம்பாளையம், அரசு உயர்நிலைப் பள்ளி.
Share:

No comments:

Post a Comment

Categories

Total Pageviews

Thamizhkadal WhatsApp Channel